பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பிரெட் கவனாக் , அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாவது உறுதியாகியுள்ளது.
அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு பிரெட் கவனாக்கை அதிபர் டொனால்டு டிரம்ப் பரிந்துரை செய்திருந்தார். ஆனால் திடீரென பிரெட் கவனாக் மீது 2 பெண்கள் பாலியல் குற்றச்சாட்டு கூறியதால் அமெரிக்காவில் சலசலப்பு ஏற்பட்டது. பாலியல் புகாருக்கு ஆளான பிரெட் கவனாக்கை நீதிபதி பதவிக்கு தேர்வு செய்யக்கூடாது என கோரிக்கை எழுந்தது. . எனினும் அவரை நீதிபதியாக நியமிக்க ஆளும் குடியரசு கட்சி தீவிர முயற்சி மேற்கொண்டது.
இந்நிலையில் அமெரிக்க செனட் சபையில் நிரந்தர உறுப்பினர்கள் மத்தியில் இதற்கான முதல் ஓட்டெடுப்பு நடைபெற்றது. இதில் பிரெட் கவனாக்குக்கு 51 ஓட்டுகள் ஆதரவாகவும், 49 ஓட்டுகள் எதிராகவும் கிடைத்தன.இதையடுத்து அவர் மயிரிழையில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதன் மூலம் அவர் நீதிபதியாக பதவி ஏற்பது ஏறக்குறையாக உறுதியாகி உள்ளது.
Discussion about this post