கேரளாவில் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட பாதிரியார் ஃபிரான்கோவை, பிஷப் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கி, வாட்டிகன் நடவடிக்கை எடுத்துள்ளது.
கேரளாவில் ஆயர் ஃபிராங்கோ மூலக்கல், தம்மை 2 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக கோட்டயத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் புகார் அளித்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அளிக்கப்பட்ட இந்த புகாரைத் தொடர்ந்து, வாட்டிகனுக்கு கடிதம் ஒன்றையும் அவர் எழுதியிருந்தார். மேலும், ஃபிரான்கோவை கைது செய்யக்கோரிக் கடந்த 12 நாட்களுக்கும் மேலாக கன்னியாஸ்திரிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், ஜலந்தர் திருச்சபைக்கான பிஷப் பொறுப்பிலிருந்து, ஃபிரான்கோவை தற்காலிகமாக நீக்குவதாக வாட்டிகன் தற்போது அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த வழக்கில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்படும் பட்சத்தில், அடுத்தகட்ட நடவடிக்கை ஆயர் பொறுப்பிலிருந்து ஃபிரான்கோ நிரந்தரமாக நீக்கப்படுவார் என்றும், வாட்டிகன் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post