ஐக்கிய அரபு எமிரேட்சில் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது . நேற்று துபாயில் நடந்த ‘சூப்பர்-4’ சுற்றுப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் சர்பராஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். .
பகர் 31 ரன்களும் கேப்டன் சர்பராஸ் 44 ரன்களும் மாலிக் 78 ரன்களும் ஆசிப் அலி 30 ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு 237 ரன்கள் எடுத்தது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக பும்ரா, சகால், குல்தீப் ஆல்கியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர் இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ஷிகர் தவான், கேப்டன் ரோகித் சர்மா ஜோடி சிறப்பான துவக்கத்தை தந்தது. எதிரணி பந்துவீச்சை வெளுத்துவாங்கிய தவான் ஒரு நாள் அரங்கில் 15வது சதத்தை எட்டினார். கடைசியில் 114 ரன்களில் தவான் ரன் அவுட்டானார். அவரை தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கேப்டன் ரோகித் சர்மா 19வது சதம் அடித்து அசத்தினார்.
இந்திய அணி 39.3 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 238 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரோகித் சர்மா 111 ரன்களும் ,அம்பதி ராயுடு 12 ரன்களும் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர். ஏற்கனவே லீக் சுற்றில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி தற்போது மீண்டும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post