பாகிஸ்தான் அதிபர் மம்னூன் உசேனின் 5 ஆண்டு பதவிக்காலம் நிறைவடைந்ததையடுத்து அந்த பதவிக்கு சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளுங்கட்சியான தெஹ்ரிக் இ இன்சாம் கட்சி சார்பில் போட்டியிட்ட டாக்டர் ஆரிப் ஆல்வி வெற்றிபெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, இஸ்லாமாபாத்தில் உள்ள அதிபர் மாளிகையில் இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆரிப் ஆல்வி அதிபராக பதவியேற்றுக் கொண்டார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மியான் சாகிப் நிசார் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் பிரதமர் இம்ரான்கான், முன்னாள் குடியரசுத்தலைவர் மம்னூன் உசைன், ராணுவ தளபதி கமார் ஜாவீத் பஜ்வா, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Discussion about this post