செல்போன் பயன்பாட்டை தவிர்க்கும் விதமாக பிரான்ஸ் நாட்டில் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி ஆரம்ப மற்றும் நடுநிலை பள்ளிகளில் இடைவேளை நேரம் உள்பட நாள் முழுவதும் மாணவ- மாணவிகள் செல்போன்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை உயர் நிலைப்பள்ளிகளும் தாமாக முன்வந்து செயல்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி செல்போன் பயன்படுத்தினால் அவற்றை பறிமுதல் செய்யும் அதிகாரம் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அரசு கூறியுள்ளது.
Discussion about this post