சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வேளாண்மைத் துறை சார்பில் விழுப்புரம் மாவட்டம் திருநாவலூரில் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையக்கட்டடத்தை காணொளிக் காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். மேலும் 44 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 28 ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையக்கட்டடங்கள், மண் பரிசோதனை நிலையக் கட்டடங்களையும் முதலமைச்சர் திறந்து வைத்தார். வணிக வரி மற்றும் பதிவுத்துறை சார்பில் 4 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பதிவுத் துறை அலுவலகம், உதவி ஆணையர் அலுவலகம் ஆகியவற்றையும் காணொளி காட்சி மூலமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.
Discussion about this post