கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தில் பேராயராக பிராங்கோ மூலக்கல் இருந்து வந்தார்.
இவர் 2014 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை தம்மை பாலியல் வன்கொடுமை செய்ததாக கன்னியாஸ்திரி ஒருவர் காவல்துறையிடம் புகார் அளித்தார்.
பேராயர் மூலக்கல் மீது, தேவாலய நிர்வாகமும், அம்மாநில காவல்துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்காததைத் தொடர்ந்து, கன்னியாஸ்திரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து மூலக்கலை தற்காலிக நீக்கம் செய்து வாடிகன் உத்தரவிட்டது.
இந்நிலையில் கொச்சியில் உள்ள குற்றப்புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் வைக்கம் டி.எஸ்.பி. சுபாஷ் தலைமையிலான சிறப்பு விசாரணைக்குழு முன்பு 3வது நாளாக பேராயர் பிராங்கோ மூலக்கல் ஆஜரானார்.
விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டு பிராங்கோ மூலக்கல் கைது செய்யப்பட்டார். ஜலந்தர் மறைமாவட்டமும் பிராங்கோவை பேராயர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்குவதாக அறிவித்துள்ளது.
பாலியல் வன்கொடுமை தொடர்பாக இந்திய பேராயர் ஒருவர் சிறை செல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post