பதவி உயர்வில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு இல்லை!

அரசுப் பதவி உயர்வில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

2006ஆம் ஆண்டு அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பை மறு பரிசீலனை செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, இடஒதுக்கீட்டுக்கு ஆதரவான மற்றும் எதிரான வாதங்களை கேட்டு தீர்ப்பு வழங்கியது.

அதில், அரசுப் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்க முடியாது என உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அரசுப் பணியில் சேர்க்கையின் போது, எஸ்.சி., எஸ்.டி., உள்ளிட்ட இடஒதுக்கீட்டுப் பட்டியலில் இருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

அதன்பிறகு, அரசுப் பணியில் பதவி உயர்வின் போது, இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற வேண்டியது இல்லை என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் இந்த விஷயத்தில் மாநில அரசுகள் முடிவு எடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

மேலும், இந்த மனுவை 7 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

Exit mobile version