டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 73 ரூபாயை தாண்டி வரலாறு காணாத சரிவை கண்டுள்ளது. சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால், ரூபாய் மதிப்பில் சில மாதங்களாக கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்திய ரூபாயின் மதிப்பு 72 ரூபாய் 91 காசுகளாக இருந்த நிலையில், இன்று காலை 34 காசுகள் சரிந்து 73.25 காசுகளாக உள்ளது. ரூபாய் மதிப்பு சரிவின் எதிரொலியாக இந்திய பங்கு சந்தையும் சரிவுடன் துவங்கின. சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி அடைந்துள்ளது.
Discussion about this post