இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளாகப் போற்றப்படும் பக்ரீத் பண்டிகை உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. புத்தாடை அணிந்து மசூதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகைகளில் ஈடுபட்டனர். குர்பானி எனப்படும் ஆடு, மாடு, ஒட்டகம் என தங்கள் வசதிக்கேற்ப விலங்குகளை பலியிட்டு அவற்றை ஏழைகளுக்குப் பகிர்ந்தளித்தனர். சென்னையில் உள்ள திருவல்லிக்கேணி மசூதியிலும் இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டனர். டெல்லியில் உள்ள பழமையான ஜூம்மா மசூதியில் அதிகாலையில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் தொழுகையில் ஈடுபட்டனர். ஒருவரையொருவர் கட்டித் தழுவி பக்ரித் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
Discussion about this post