நேதாஜி, விஷம் வைத்து கொல்லப்பட்டார் என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
இந்திய சுதந்திர போராட்ட வீரர் நேதாஜியின் மரணம் குறித்து தொடர்ந்து சர்ச்சை நிலவி வருகிறது. கடைசி காலத்தில் அவர் என்னவானார் என்பது குறித்து இன்னமும் மர்மம் நீடித்து வருகிறது. அதே நேரம் ,நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், 1945 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18-ஆம் தேதி நடந்த விமான விபத்தில் உயிரிழந்ததாக ஜப்பான் அரசு அறிவித்தது.
இதற்கிடையே, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில் இறக்கவில்லை, சோவியத் யூனியன் சர்வாதிகாரி ஸ்டாலினால் சிறையில் வைத்து கொல்லப்பட்டார் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியண் சுவாமி தெரிவித்துள்ளார். இது குறித்து திரிபுராவில் பேசிய அவர், இந்த விஷயம் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்குத் தெரியும் என்றும் தெரிவித்துள்ளார் .
1945-ம் ஆண்டு நேதாஜி விமான விபத்தில் உயிரிழந்தார் என பரப்பட்ட தகவல் நேரு மற்றும் ஜப்பானின் கூட்டு சதித்திட்டம் என அவர் குற்றம் சாட்டியுள்ளார். அப்போதயை சோவியத் யூனியனில் தங்குவதற்கு இடம் தேடிய நேதாஜிக்கு சர்வாதிகாரி ஸ்டாலின் தஞ்சமடைய அனுமதியளித்தார். ஆனால் சிறையில் அடைக்கப்பட்ட அவர் ஸ்டாலின் உத்தரவால் கொல்லப்பட்டார் என்றும் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ள இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Discussion about this post