நேற்று செங்கனூரில் இருந்து புறப்படுவதற்காக ராகுல்காந்தி ஹெலிக்காப்டரில் ஏறினார். அப்போது, அந்த தளத்திற்கு ஒரு ஏர் ஆம்புலன்ஸ் வந்தது. இதுபற்றி விசாரித்த ராகுல், நோயாளி ஒருவரை ஆலப்புழாவிற்கு அழைத்துச் செல்ல அந்த ஏர் ஆம்புலன்ஸ் அங்கு வந்ததை தெரிந்து கொண்டார். இதனையடுத்து, முதலில் ஏர் ஆம்புலன்ஸ் பறப்பதற்கு அனுமதி வழங்குமாறும், பின்னர் தான் செல்வதாகவும் ராகுல் காந்தி தெரிவித்தார். இதனையடுத்து ஏர் ஆம்புலன்சிற்கு சென்று நோயாளியையும் பார்வையிட்டார். பின்னர் அந்த ஹெலிக்காப்டர் செல்லும் வரை காத்திருந்த ராகுல், அரை மணி நேரத்திற்கு பிறகு அங்கிருந்து புறப்பட்டார். ஏர் ஆம்புலன்ஸ் முதலில் செல்வதற்கு ராகுல் காந்தி தனது பயணத்தை ஒத்திவைத்த நிகழ்வு சமூக வலைதளங்களில் பாராட்டுக்களை பெற்றுள்ளது.
Discussion about this post