மருத்துவர் ஜமீலா வாட்ஸ் அப்பில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், பல பிரச்னைகளால் மனமுடைந்து, நிலானி தற்கொலைக்கு முயன்றது குறித்து சமூக ஊடகங்களில் மோசமான விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதாகக் கூறினார்.
பெண் என்றும் பாராமல் மிகமோசமாக விமர்சிப்பதுதான் கருத்து சுதந்திரமா என ஜமீலா வினவியுள்ளார். 2 குழந்தைகளுடன் அரசு மருத்துவமனையில் தனியாக சிகிச்சை பெற்று வந்த நிலானியை பார்த்து, மனம் பதைத்து, தான் அழைத்து வந்ததாக அவர் கூறியுள்ளார்.
மூன்று நாட்களாக நிலானி தனது பாதுகாப்பில் இருப்பதாகவும், அவர் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் டாக்டர் ஜமீலா தெரிவித்துள்ளார்.
அவர் தப்பியோடியதாகக் கூறுவது தவறு என்று குறிப்பிட்டுள்ள அவர், 2 குழந்தைகள் உள்ளதை கவனத்தில் கொண்டு நிலானியை வாழ விடுங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
டாக்டர் ஜமீலா, பா.ஜ.க. சார்பில் ஆர்.கே. நகரில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.