தமிழகத்துக்கு ஒரு நாளுக்கு 72,000 மெட்ரிக் டன் நிலக்கரி ஒதுக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். தமிழக அனல்மின் நிலையங்களில் நிலக்கரி கையிருப்பு குறைந்து விட்டது என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
3 நாட்களுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே இருப்பதாக பிரதமருக்கு முதல்வர் கடிதத்தில் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நிலவும் நிலக்கரி பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
சுரங்கங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு குறைந்த அளவே நிலக்கரி அனுப்பப்படுகிறது என்று தெரிவித்துள்ளார். போதுமான நிலக்கரி கிடைக்காவிட்டால் அனல்மின்நிலையங்களை மூடும் நிலை ஏற்படும் என்று கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
காற்றாலையில் இருந்து கிடைக்கும் மின்சாரமும் நின்றுவிட்டதால் தமிழகத்துக்கு நெருக்கடி ஏற்படும் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நிலக்கரி அமைச்சகத்திற்கும் கடிதம் எழுதியுள்ளார்.