நியூட்ரினோ திட்டத்தால் கதிர்வீச்சு பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என்று திட்ட ஆய்வு இயக்குநர் விவேக் தத்தார் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நியூட்ரினோ திட்டத்தால், கதிர்வீச்சு பாதிப்பு ஏற்படும் என்று அப்பகுதி மக்களிடையே தகவல் பரவியது.
இந்தநிலையில், தேனியில் செய்தியாளர்களை சந்தித்த நியூட்ரினோ திட்ட ஆய்வு இயக்குநர் விவேக் தத்தா, நியூட்ரினோ திட்டத்தால் கதிர்வீச்சு பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என்று குறிப்பிட்டார். பூமியை துளைத்து நியூட்ரினோ ஆய்வு நடத்தப்படமாட்டாது என்றும், நியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது என்றும் விளக்கம் அளித்தார்.
அணுக் கதிரியக்க கழிவுகளை சேகரிக்க மாட்டோம் என்றும், திட்டத்திற்கு நாள் ஒன்றும் 340 கிலோ லிட்டர் தண்ணீர் மட்டுமே பயன்படுத்தப்பட உள்ளதால், உள்ளூர் நீர் தேவை பாதிக்காது என்றும் அவர் தெரிவித்தார்.