முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேரை தமிழக அரசின் பரிந்துரையின் பேரில் ஆளுநர் விடுதலை செய்யலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே, 7 பேரின் விடுதலை குறித்து தமிழக அரசு உடனே முடிவெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இந்தநிலையில், தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை நடைபெறுகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், 7 பேரின் விடுதலை குறித்து ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படுகிறது. அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவு, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் அடிப்படையில், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரும் விடுதலை செய்யப்படுவார்கள் எனத் தெரிகிறது.
Discussion about this post