வீரப்பன் மற்றும் அவரது கூட்டாளிகள் சேத்துக்குளி கோவிந்தன், சந்திரகவுடா , கோவிந்தராஜ் உள்ளிட்ட 14 பேர் மீது தளவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அதன் பிறகு, 2004 ஆம் ஆண்டு நடந்த என்கவுண்டரில், வீரப்பன் உட்பட 3 பேர் கொல்லப்பட்டனர். வழக்கு நடக்கும்போது ஒருவர் இறந்துவிட்டார். மேலும் ஒருவர் தலவைமறைவாக உள்ளார்.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த கோபிசெட்டிபாளையம் நீதிமன்றம், 18 ஆண்டுகளுக்குப் பிறகு 9 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த அரசு வழக்கறிஞர் தனகோட்டிராம், இந்த வழக்கு தொடர்பாக இரு மநில அதிகாரிகளுடனும் கலந்து ஆலோசிக்க உள்ளதாக கூறினார்.
9 பேர் விடுதலைக்கு எதிராக மேல் முறையீடு செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Discussion about this post