அரசன் திரைப்படத்திற்கு வாங்கிய முன் பணத்தை அக்.31க்குள் நடிகர் சிம்பு செலுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிம்புவிற்கு வழங்கிய ரூ. 50 லட்சம் முன் பணத்தை வட்டியுடன் சேர்த்து வழங்கக் கோரி பேஷன் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது.
இந்த வழக்கில் வட்டியுடன் சேர்த்து ரூ. 85.50 லட்சத்தை மனுதாரருக்கு வழங்க உத்தரவாதம் அளிக்குமாறு சிம்புவிற்கு ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது.
வட்டி செலுத்த வேண்டும் என ஒப்பந்தத்தில் இல்லாததால் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மாற்ற வேண்டும் என சிம்பு தரப்பில் வாதம் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் அரசன் திரைப்படத்திற்கு வாங்கிய முன் பணத்தை அக்.31க்குள் நடிகர் சிம்பு செலுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பணத்தை செலுத்த தவறினால் நடிகர் சிம்புவின் சொத்துக்களை ஜப்தி செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Discussion about this post