தொடர் விடுமுறை காரணமாக, உதகையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. ஆயுத பூஜை, விஜயதசமியையொட்டி, தொடர்ந்து 4 நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டது. இதனால், சுற்றுலா தலங்களில் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. இதேபோன்று, நீலகிரி மாவட்டம் உதகையில் சுற்றுலா பயணிகள் பெருமளவில் குவிந்தனர். கடந்த சில நாட்களாக உதகையில் கனமழை பெய்து வந்ததால், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது. இந்நிலையில், தொடர் விடுமுறை காரணமாக தமிழகம், கேரளா, கர்நாடக மாநிலங்களில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால், சுற்றுலாத் தலங்களில் கூட்டம் அலைமோதியது.
Discussion about this post