இது குறித்து பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ஒ.பி.ராவத், தேர்தல் நடத்தை விதிமீறலைக் கண்டால், அதை புகைப்படமாகவோ, வீடியோவாக பதிவு செய்து தேர்தல் அதிகாரிக்கு தெரிவிக்கவே ‘சி-விஜில்’ ஆப் -ஐ உருவாக்கி இருப்பதாக கூறினார்.
தகவல் கொடுப்பவரின் ரகசியம் காக்கும் வசதியும் அதில் உள்ளதாக அவர் தெரிவித்தார். புகாரின் உண்மைத் தன்மையை பொறுத்து 100 நிமிடங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
புகாரின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட வாக்காளர்களுக்கு அந்த செயலி வழியாகவே தெரிவிக்கப்படும் என்று அவர் கூறினார்.
முதற்கட்டமாக மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம், சட்டீஸ்கர் ஆகிய 4 மாநில சட்டசபை தேர்தலில் இந்த ஆப்-ஐ பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் ராவத் தெரிவித்தார்.
Discussion about this post