தேர்தலை தனித்து நின்று சந்திக்க தயாரா என்று திமுகவுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ சவால் விடுத்துள்ளார்.
துத்துக்குடியில் அதிமுக சார்பில் நடைபெற்ற அண்ணாவின் 110வது பிறந்தநாள் விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிட்டதாக கூறினார்.
திமுகவைப் போல 10 கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை அதிமுக சந்திக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டினார். வரும் சட்டப்பேரவை தேர்தலை தனித்து நின்று சந்திக்க தயாரா என திமுகவுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ சவால் விடுத்தார்.
Discussion about this post