அமைதி பேச்சுவார்த்தை நடத்த வருகை தந்த தென் கொரிய அதிபருக்கு வடகொரியாவின் பியாங்யாங் நகரில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிபர் கிம் ஜாங் உன் அவரை நேரில் வரவேற்றார்.
தென்கொரிய அதிபர் மூன் ஜே இன், வடகொரிய அதிபர் கிம் ஜங்கை மூன்றாவது முறையாக சந்திக்க உள்ளார். இதற்காக பியாங்யாங் சென்றடைந்த அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதிபர் கிம் ஜாங் விமான நிலையத்துக்கு வந்து அவரை வரவற்றார். இருநாட்டு தலைவர்களின் சந்திப்பு மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது.
அணு ஆயுத ஒழிப்பு, இருநாட்டு நல்லுறவை மேம்படுத்துவது, பொருளாதார வளர்ச்சி, வர்த்தக உறவு குறித்து இரு நாட்டு அதிபர்களும் விவாதிக்கின்றனர். முக்கியத்துவம் வாய்ந்த இந்த சந்திப்பு, கொரிய தீப கற்பத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.