தென்கொரிய தலைநகரான சியோலில் பிரபலமான சூப்பர் மார்கெட் ஒன்றில் மனித ரோபோக்கள் வேலையில் அமர்த்தப்பட்டுள்ளன. ஜப்பானின் softbank robotics நிறுவனம் தயாரித்த இந்த ரோபோக்கள் செயற்கை நுண்ணறிவுடன் உருவாக்கப்பட்டவை. வெனி (veny) என பெயரிடப்பட்ட ரோபோ, காசாளர் பணியை செய்து வருகிறது. வாடிக்கையாளர்கள் கொடுக்கும் கார்ட் அல்லது பணம் போன்றவற்றை சரியான முறையில் கணக்கு பார்ப்பதுடன், உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையிலும், முகத்திரை அமைக்கப்பட்டுள்ளது. பெப்பர் என பெயரிடப்பட்ட மற்றோரு ரோபோ, வாடிக்கையாளர்களுக்கு தேவைப்படும் பொருட்கள் இருக்கும் இடத்திற்கு அழைத்து செல்லும் பணியை செய்கிறது. இந்த ரோபோக்களிடம் பேசுவதன் மூலம் மற்றும் அதன் திரையில் எழுதுவதன் மூலம் தகவல் பறிமாற்றம் செய்ய முடியும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற ரோபோக்கள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளதாக சூப்பர் மார்க்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால், ரோபோக்களின் எண்ணிக்கையை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
Discussion about this post