தூய்மையே சேவை இயக்கத்தை தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சியர் ரோகினி உறுதிமொழி வாசிக்க, சேலம் உருக்காலை தொழிலாளர்கள் அனைவரும் உறுதியேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் ரோகினி, தமிழகம், தூய்மையில் முன்னணி மாநிலமாக திகழ முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும், அதன்படி சேலம் மாவட்டத்தில் தூய்மை பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.
தூய்மைப் பணியில் மாணவர்கள், பொதுமக்கள், அரசு அலுவலர்கள், தொண்டு நிறுவனங்கள் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
வீரபாண்டி சட்டமன்ற உறுப்பினர் மணோண்மணி உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, உருக்காலை பணியாளர்கள், சேலம் பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் தனியார் கல்லூரி மாணவர்கள், சேலம், தாரமங்கலம் இடையேயான பிரதான சாலையில் உள்ள குப்பைகளை அகற்றினர்.
Discussion about this post