தீப கற்ப தென்னக நதிகளை இணைக்க வேண்டுமென்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
செயின்ட் பீட்டர்ஸ் உயர்கல்வி தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் திராவிட இயல் ஆய்வு நிறுவன துவக்க விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்தநிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர்கள், திண்டுக்கல் சீனிவாசன், விஜய பாஸ்கர், கடம்பூர் ராஜூ, பாண்டியராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, திராவிட மொழியின் தாயாக தமிழ் மொழி விளங்குவதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார். திராவிடம் குறித்து மாணவர்களிடையே எடுத்துச் செல்ல, எடுக்கப்பட்டுள்ள முயற்சி வெற்றி பெறும் என்றும் அவர் வாழ்த்து தெரிவித்தார். மாணவர்களிடையே கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளை நடத்த வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.