விஜயதசமி விழாவையொட்டி, திருவாரூர் அருகே கூத்தனூர் சரஸ்வதி கோவிலில் நடைபெற்ற, குழந்தைகளுக்கு நெல்மணிகளில் எழுந்தும் நிகழ்ச்சியில் ஏராளமான பெற்றோர் கலந்து கொண்டனர். விஜயதசமி விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, குழந்தைகளை பள்ளிகளில் சேர்ப்பதில் பெற்றோர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். விஜயதசமியையொட்டி, திருவாரூர் அருகே உள்ள கூத்தனூர் சரஸ்வதி கோவிலில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சரஸ்வதியை வழிபட்டனர். தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு பூஜைகளிலும் அவர்கள் கலந்து கொண்டனர். பின்னர், தங்களது குழந்தைகளுக்கு நெல்மணிகளில் எழுதக் கற்றுக் கொடுக்கும் மரபை பெற்றோர்கள் பின்பற்றினர். விஜயதசமி நாளில், கல்விக் கடவுளான சரஸ்வதியை வழிபட்டு, குழந்தைகளுக்கு நெல்மணிகளில் எழுதக் கற்றுக் கொடுப்பது, தமிழகத்தில் காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post