திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் , திருவண்ணாமலை மாவட்டம் உருவான நாள் விமரிசையாக கொண்டாடப்பட்டது.
கடந்த 30-09-1989 ம் ஆண்டு ஓருங்கிணைந்த வட ஆற்காடு மாவட்டத்தில் இருந்து திருவண்ணாமலை சம்புவராயர் மாவட்டம் பிரிக்கப்பட்டது. பின்னர 1997ம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டம் என்று தனியாக பெயர் சூட்டப்பட்டது.
அதன்படி 29 ஆண்டுகள் நிறைவடைந்து 30வது ஆண்டில் திருவண்ணாமலை மாவட்டம் அடியெடுத்து வைக்கின்றது.
இதனை கொண்டாடும் விதமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படிருந்தது. மாவட்ட ஆட்சியர் கந்தசாமி மற்றும் அனைத்து அரசு துறை அதிகாரிகளும் பாரம்பரிய உடைகளான வேட்டி மற்றும் சேலைகள் அணிந்து வந்திருந்தனர்.
பள்ளி மாணவிகளை கொண்டு சிறிய மண்வெட்டியால் கேக் வெட்டப்பட்டது. கேழ்வரகு, நிலக்கடலை ,கருப்பட்டி, வெல்லம் சேர்த்து செய்யப்பட்டிருந்த அந்த கேக், அனைவருக்கும் வழங்கப்பட்டது. விழாவை முன்னிட்டு அலுவலக வளாகத்தில் பாரம்பரிய இசை நிகழ்ச்சி நடத்தப்படது. வீர விளையாட்டுகளை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைவரும் கண்டு களித்தனர். அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மன் சிறப்பு தபால் தலைகளை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்.
Discussion about this post