தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி, ஜெர்மன் மனித உரிமை ஆணையத்தில் கோரிக்கை விடுத்திருந்தார். பின்னர் அங்கிருந்து நாடு திரும்பிய திருமுருகன் காந்தியை பெங்களூரு விமான நிலையத்தில் போலீசார் கைது செய்தனர். பின்னர் சென்னைக்கு அழைத்து வரப்பட்ட அவர், பல்வேறு வழக்குகளின் கீழ் குற்றம்சாட்டப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அது மட்டுமின்றி சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் திருமுருகன் காந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனிடையே தன் மீது தொடரப்பட்டுள்ள வழக்கில் ஜாமின் வழங்கக் கோரி சென்னை செஷன் நீதிமன்றத்தில் திருமுருகன் காந்தி மனுத்தாக்கல் செய்துள்ளார்.
Discussion about this post