புரட்டாசி மாதம் பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபடுவது வழக்கம். அதன்படி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில் தொடர் விடுமுறை காரணமாக நேற்று மாலை முதலே பக்தர்களின் வருகை அதிகரித்துக் கொண்டே இருந்தது. இதனிடையே புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையான இன்று பல்வேறு சிறப்பு டிக்கெட்டுகளை பெற்ற பக்தர்களும் கூட குறிப்பிடப்பட்டுள்ள நேரத்திற்கு அனுமதிக்கப்பட்டு சுமார் 3 மணி நேரத்திற்கு பிறகே சுவாமி தரிசனம் செய்து வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேரடியாக இலவச தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் வைகுண்டத்தில் உள்ள 31 அறைகள் நிரம்பி லேபாக்ஷி ( lepakshi ) சந்திப்பு வரை சுமார் மூன்று கிலோமீட்டருக்கு வரிசையில் காத்திருக்கின்றனர். இந்நிலையில் வரிசைகளில் போதிய வசதிகள் இல்லாததால் பக்தர்களிடையே கூட்ட நெரிசல் ஏற்பட்டு கடும் அவதிக்குள்ளாவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Discussion about this post