மயிலாடுதுறையில் திருநங்கைகளை மதுபோதையில் தகாத முறையில் பேசியவரை கொலை செய்த 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்…
மது போதையில் திருநங்கைகளிடம் தகாத முறையில் பேசிய மயிலாடுதுறையை சேர்ந்த ஐயப்பன் திருநங்கைகளை தகாத முறையில் பேசியதால் 5 பேர் கொண்ட கும்பல் ஐயப்பன் வீட்டிற்கு சென்று வாக்குவாதம் வாக்குவாதம் முற்றியதால் 5 பேரும் சேர்ந்து ஐயப்பனை உருட்டுக் கட்டையால் தாக்கியதுடன், கத்தியால் குத்தினர்
ஐயப்பனை கடுமையாகத் தாக்கி கொலை செய்த 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்
மயிலாடுதுறை ஆற்றங்கரை தெரு வேதம்பிள்ளை காலனியை சேர்ந்தவர் 48 வயதான ஐயப்பன். இவர் கடந்த 7ம் தேதி இரவு குடிபோதையில் அதேபகுதியை சேர்ந்த திருநங்கைகளிடம் தகாத முறையில் பேசியுள்ளார். தங்களை இழிவாக பேசியவர்கள் குறித்து, அப்பகுதியை சேர்ந்த இளைஞர்களிடம் திருநங்கைகள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, திருநங்கைகளுக்கு ஆதரவாக மயிலாடுதுறையை சேர்ந்த ரஞ்சித், கணேசன், மணிகண்டன், பஜ்ருதீன், அருள்ராஜா ஆகிய 5 பேரும் ஐயப்பன் வீட்டிற்குச் சென்று தட்டிக்கேட்டுள்ளனர். அப்போது, இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியுள்ளது.
இதையடுத்து ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்ற 5 பேரும் சேர்ந்து ஐயப்பனை உருட்டுக் கட்டையால் தாக்கி, கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். மயங்கிக் கிடந்த ஐயப்பனை அவரது உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், ஐயப்பன் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்த மயிலாடுதுறை போலீசார் ஐயப்பனின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பிவைத்து, குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்தநிலையில் அதே பகுதியில் மறைந்திருந்த 5 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கொலை செய்யப்பட்ட ஐயப்பன் மீது 2006ம் ஆண்டு முதல் பல்வேறு அடிதடி வழக்குகள் உள்ளன. திருநங்கைகளை இழிவாக பேசிய ஒருவர் அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post