கரூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக மத்திய அரசை தொடர்பு கொண்டு ஆட்சியை கவிழ்க்க திட்டம் தீட்டி வருவதாக கண்டனம் தெரிவித்தார். சிபிஐ, வருமானவரி சோதனை போன்ற அச்சுறுத்தல்களுக்கு அதிமுக அரசு பயப்படாது எனக் குறிப்பிட்ட தம்பிதுரை, ஆளுங்கட்சிக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக சோதனைகள் நடத்தப்படுவது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல என எச்சரித்தார். திமுகவுடன் கூட்டணி வைக்க தமிழக பாஜக தலைவர்கள் முயற்சித்து வருவதாக கூறிய அவர், ஸ்டாலினுக்கு மறைமுகமாக பாஜக உதவி செய்து வருவதாக விமர்சித்தார். உண்மையான கூட்டணி திமுக – பாஜக இடையே இருப்பதாக தம்பிதுரை தெரிவித்தார்.
Discussion about this post