அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திமுக, காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சி செய்த போது, இலங்கை ராணுவத்துக்கு இந்திய அரசு அளித்த உதவிகளைப் பற்றிய ரகசியத்தை இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்ச ஒப்புதல் வாக்குமூலமாக பகிரங்கப்படுத்தியிருக்கிறார்.
ஈழப்போரில் அப்பாவி மக்கள் படுகொலைக்குக் காரணமான திமுக, கருணாநிதி, காங்கிரஸ் கும்பலை போர்க்குற்றவாளிகளாக அறிவித்து விசாரிக்க வேண்டும் என்று 01.07.2010 அன்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டார்.
இதுகுறித்த அனைத்து ரகசியங்களையும் ராஜபக்ச வெளிப்படுத்தியிருக்கும் சூழ்நிலையில், ஒன்றரை லட்சம் ஈழத் தமிழர்கள் படுகொலைக்கும், பல்லாயிரக்கணக்கான தமிழ் பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கும்,
உடந்தையாய் செயல்பட்ட திமுக, காங்கிரஸ் கூட்டணி அரசின் படுகொலைகளை சர்வதேச போர்க்குற்றங்களாகக் கருதி சம்பந்தப்பட்டவர்களை போர்க்குற்றவாளிகளாக்கி தண்டிக்க வேண்டும் என்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.