கரூர் மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கரூர் 80 அடி சாலையில் தமிழ் இனப்படுகொலைக்கு காரணமான திமுக காங்கிரஸ் கட்சிகளை கண்டித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டத்தில் மக்களவை துணை சபாநாயகரும் கழக கொள்கைபரப்பு செயலாளருமான மு.தம்பிதுரை மற்றும், தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சரும் கரூர் மாவட்ட கழக செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், இலங்கை விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாகவும், இதற்கு காங்கிரஸ் துணை போனதாகவும் குறிப்பிட்ட அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர்,
அவ்விரு கட்சிகளையும் போர் குற்றவாளிகளாக அறிவித்து தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
பின்னர் பேசிய மக்களவை துணை சபாநாயகர் மு.தம்பிதுரை, கடந்த அம்மா ஆட்சியின் போது தமிழ் இன படுகொலைக்கு காரணமான திமுக காங்கிரஸ் கட்சிகளுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும்,.
அந்த இரு கட்சிகளையும் போர் குற்றவாளிகளாக அறிவித்து மத்திய அரசின் மூலம் ஐநா சபைக்கு அறிக்கை அனுப்ப முடிவு செய்யப்பட்டதாகவும், கூறினார். இனத்தை காட்டிக் கொடுத்து தமிழர்களுக்கு திமுக கங்கிரஸ் துரோகம் இழைத்ததாகவும் குறிப்பிட்டார்.
மேலும் இதற்காக கையூட்டுப் பெற்றுக் கொண்டதாகவும், ஆகையால் அந்த இரு கட்சிகளும் தண்டனை பெற வேண்டும் என சபாநாயகர் தம்பி துரை கூறினார்.
Discussion about this post