லேடி சூப்பர் ஸ்டார் என புகழப்படும் நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலிப்பதாக கூறப்படுகிறது. இருவரும் அடிக்கடி வெளிநாட்டிற்கு சென்று செல்பி எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இருவரும் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலுக்குச் சென்றனர். அங்கு லங்கர் அரங்கில் இலவசமாக உணவு சாப்பிட்டு, அதனை வீடியோ எடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் நயன்தாரா பதிவிட்டுள்ளார். இது மட்டுமின்றி, அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார்.
குருத்துவாராவிற்கு வரும் அனைத்து மதத்தை சேர்ந்தவர்களுக்கும், சாதி வேறுபாடின்றி பெரிய அரங்கில் இலவசமாக உணவு வழங்கப்படும். இதனை லங்கர் என்பர்.
வருடத்தின் அனைத்து நாட்களிலும் இங்கு இலவசமாக உணவு வழங்கப்படும். மற்ற நாட்களில் சைவ உணவும், தீபாவளி பண்டிகையன்று அசைவ உணவும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post