தகவல் தொடர்பு நிறுவனங்களின் முதலீட்டை ஈர்க்கும் வகையிலும், வணிக வளர்ச்சிக்கு உதவிடும் வகையிலும் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப கொள்கை 2018 ஐ தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கான செயல்திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு மேம்படுத்துதல் தொடர்பாக தொழிற்சாலைகள் மற்றும் தொழிற்கல்வி நிறுவனங்களுககு இடையேயான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இதில் முன்னணி தொழிற்சாலை நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரி கூட்டமைப்புகளின் நிர்வாகிகள், பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இதில் பொறியியல் மாணவர்கள் செயல்திறன்கள், அவர்களின் வேலைவாய்ப்பை மேம்படுத்துவது தொடர்பாக பல்வேறு தரப்பினரின் கருத்துக்கள் கேட்கப்பட்டன .
மேலும் புதிய தகவல் தொழில்நுட்பவியல் கொள்கை விரைவில் வெளியிடப்படும் என கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் இன்றைய தினம் புதிய தொழில்நுட்பவியல் கொள்கையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார்.
அதில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், நிறுவனங்கள் மூலமாக வேலைவாய்ப்பை பெறுக்கவும் இதில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நிறுவனங்கள் எளிதாக தொடங்க ஒற்றை சாளர முறை ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதனை மேலும் எளிமையாக்கவும் தற்போது வெளியிட்டுள்ள தகவல் தொழில்நுட்பவியல் கொள்கையில் வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன