தமிழ்நாட்டில் நடப்பு காரிப் கொள்முதல் பருவத்திற்கான அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் ஆகஸ்ட் 31ம் தேதி வரை மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழக அரசு சார்பில் 115 கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்பிலான சிறப்பு குறுவை சாகுபடி தொகுப்பு திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டதன் விளைவாக டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து நெல் அறுவடை செய்யப்பட்டு அனுப்பப்பட்டு வருகிறது. இதனால் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களின் கால அளவை நீட்டிக்குமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அமைச்சர் ராம்விலாஸ்பாஸ்வானுக்கு கடிதம் எழுதினார். இதுகுறித்து தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ், மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானை நேரில் சந்தித்து தமிழக விவசாயிகளின் கோரிக்கையை எடுத்துரைத்தார். இதையடுத்து வரும் 30ம் தேதி வரை நெல் நேரடி கொள்முதல் நிலையங்கள் செயல்பட அனுமதி அளித்து மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
Discussion about this post