தமிழகத்தில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அமைச்சர் தங்கமணி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
நாமக்கல் அருகே உள்ள பொன்விழா நகரில் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட அம்மா பூங்கா மற்றும் அம்மா உடற்பயிற்சி மையத்தை அவர் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, தமிழகத்தில் காற்றாலை மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால், மத்திய அரசு வழங்கி வந்த நிலக்கரியின் அளவை கடந்த ஆண்டுகளில் குறைத்து வழங்கியதாக கூறினார். இதுகுறித்து பிரதமருக்கு கடிதம் எழுதிய பிறகு நிலக்கரி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். தற்போது தேவையான அளவுக்கு நிலக்கரி கையிருப்பு உள்ளதால் தமிழகத்தில், மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அவர் திட்டவட்டமாக கூறினார். மின்வெட்டு குறித்து எதிர்க்கட்சியினர் தவறான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் தங்கமணி குற்றம்சாட்டினார்.
Discussion about this post