புதிதாக 716 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8ஆயிரத்து 718 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட 716 பேரில் 427 பேர் ஆண்கள் என்றும், 288 பேர் பெண்கள் என்றும் ஒருவர் திருநங்கை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் 510 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 882 ஆக உயர்ந்துள்ளது. அரியலூர் மாவட்டத்தில் 36 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 35 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செயப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் தலா 27 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 24 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் 13 பேருக்கும் ராணிப்பேட்டையில் 9 பேருக்கும், தேனியில் 7 பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று 83 பேர் குணமடைந்தனர். இதனால் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்து134 ஆக அதிகரித்துள்ளது.
Discussion about this post