வரலாறு காணாத பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்தும் நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்து இருந்தது. அதன்படி, தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டத்திற்கு திமுக, இடதுசாரி கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளன. இதேபோன்று, தமிழ்நாடு வணிகர் சங்கம், தொ.மு.ச, சி.ஐ.டி.யு. உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்களும் முழு வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளன. .தமிழகம் முழுவதும் 65 லட்சம் கடைகள் அடைக்கப்படும் எனவும்,ஆட்டோக்கள், வேன்கள், லாரிகள் இயக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டது.இந்நிலையில், சென்னையில் வழக்கம் போல் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன,பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வேலை நிறுத்த போராட்டம் தமிழகத்தில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆந்திரா, கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருவதால், அந்த மாநிலங்களுக்கு தமிழகத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பிசுபிசுத்த முழுஅடைப்பு
-
By Web Team

- Categories: TopNews, செய்திகள், தமிழ்நாடு
- Tags: தமிழகம்முழுஅடைப்பு
Related Content

14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
By
Web Team
September 27, 2020

மகாராஷ்டிராவை விட தமிழகம் பல துறைகளில் சிறந்து விளங்குகிறது: ஆளுநர் பெருமிதம்
By
Web Team
December 31, 2019

ஊரக வேலை உறுதித் திட்டத்தில் முதலிடம் பெற்ற தமிழகத்துக்கு தேசிய விருதுகள்
By
Web Team
December 19, 2019

தமிழகம் மற்றும் ஆந்திரா குறித்து அமித் ஷா பெருமிதம்
By
Web Team
August 6, 2019

இந்த ஆண்டும் தமிழகத்தில் வெயில் அதிகமாக இருக்கும்
By
Web Team
March 23, 2019