ட்விட் போடுவதால் பெட்ரோல் விலை குறைந்து விடுமா? என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கேள்வி எழுப்பியுள்ளார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு மத்திய அரசின் நடவக்கையால் பெட்ரோல் டீசல் விலை ரூ. 2.50 குறைந்தது.
இதன்பின்னரும் எதிர்க்கட்சிகளும் பொதுமக்களும் மத்திய அரசை விமர்சித்து வந்தனர். இதற்கு பதிலளிக்கும் வகையில் அருண் ஜெட்லி பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட்டுள்ளார்.
அதில் அவர் , சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பிரச்னை காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வை சந்திக்கும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டோம். இந்த பிரச்னைகளை எதிர்க்கட்சி தலைவர்களைப் போன்று வெறும் ட்வீட்-களை போட்டுக் கொண்டும், டிவியில் பேட்டி அளித்துக் கொண்டும் தீர்த்து விட முடியாது. இது கொஞ்சம் சீரியஸான பிரச்னை. இன்னும் சொல்லப்போனால், ராகுல் காந்தியும், அவரது கூட்டணி கட்சியினரும்தான் ட்வீட் செய்கின்றனர், டிவியில் பேட்டி அளிக்கின்றனர். இதனால் சாமானிய மக்களுக்கு ஏதேனும் பலன் ஏற்படுமா?. என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Discussion about this post