தொடர்ந்து சில நாட்களாக பெட்ரோல் டீசல் விலை அதிகரித்த வண்ணம் உள்ளன. டீசல் விலை இதுவரை இல்லாத விலை உயர்வை கண்டுள்ளது. டீசல் நேற்றைய விலையிலிருந்து 15 காசுகள் அதிகரித்து 73 ரூபாய் 69 காசுகளாகவும் பெட்ரோல் 13 காசுகள் உயர்ந்து 81ரூபாய் 22 காசுகளாகவும் உள்ளது. இந்நிலையில் ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா மற்ற நாடுகளுக்கு தடை விதித்துள்ளது. இதனால் 40 சதவீத கச்சா எண்ணெய் ஈரானில் முடங்கியுள்ளது. இதனையடுத்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் , அதன் தேவையும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதே போல் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் குறைந்து வருவது பெட்ரோல், டீசல் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post