கீரியும் பாம்புமாக இருந்த வடகொரியாவும், அமெரிக்காவும் தற்போது தோழர்களாக மாறியுள்ளன. எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம் என்ற நிலை மாறியது. இதற்கு காரணமாக அமைந்தது ஜுன் 12 ஆம் தேதி நடைபெற்ற டிரம்ப் – கிம் சந்திப்பு.
இந்நிலையில் இரண்டாவது முறையாக டிரம்ப்புடன் பேச விருப்பம் தெரிவித்துள்ளார் கிம். இதற்காக ஒரு கடிதம் ஒன்றை டிரம்பிற்கு அவர் அனுப்பியுள்ளார். இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய, வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ், இந்த சந்திப்பை அமெரிக்காவும் எதிர்பார்த்து காத்திருந்ததாக குறிப்பிட்டார்.
கொரிய வளைகுடா பகுதியில் அணு ஆயுதமற்ற நிலையை உருவாக்குவதற்கு கவனம் செலுத்த வேண்டிய தேவை உள்ளதாக அவர் தெரிவித்தார். கிம்மின் கடிதம் மிகவும் வரவேற்கத்தக்க வகையிலும், நேர்மறையாகவும் இருந்ததாக சாண்டர்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மாத இறுதியில் ஐ.நா. கூட்டத்தில் டிரம்ப் கலந்து கொள்ள உள்ளார். அதே நேரம் கிம் கலந்து கொள்வதாக இதுவரை அறிவிக்கவில்லை. இதனால் இரு தலைவர்களும் எப்போது பேசுவார்கள் என தகவல் இல்லை. எப்படியோ சண்டை இல்லாமல் இருந்தால் சரி.
Discussion about this post