மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷனை தமிழக அரசு அமைத்தது. இந்த கமிஷன் ஜெயலலிதா தொடர்புடைய அனைவருக்கும் சம்மன் அனுப்பி விசாரித்து வருகிறது.
சுமார் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி உள்ள விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் அடுத்த மாதம் 24-ம் தேதி உடன் முடிவடைய உள்ளது. அதற்கு முன்னதாக அனைத்து தரப்பு விசாரணையையும் முடித்து அறிக்கையை தாக்கல் செய்ய கமிஷன் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், அப்பல்லோ மருத்துவமனையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட போது லண்டனில் இருந்து வந்து சிகிச்சை அளித்த ரிச்சர்ட் பீலே, சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனை மருத்துவர்கள் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி வீடியோ கான்பிரன்சிங் முறையில் விசாரிக்க ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் திட்டமிட்டுள்ளது.
அக்டோபர் முதல் வாரத்தில் இந்த விசாரணை இருக்கலாம் என கூறப்படுகிறது. கடந்த மாதம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் ஜி.சி கில்னானி, அஞ்சன்டிரிகோ, நிதிஷ் நாயக் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post