இயக்குனர் ஏ.எல்.விஜய், மற்றும் இயக்குனர் மிஷ்கினின் உதவியாளர் பிரியதர்ஷினி ஆகியோர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கப் போவதாக அறிவித்துள்ளனர். இந்தநிலையில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அம்மா – புரட்சி தலைவி என்ற பெயரில், திரைப்படமாக எடுக்கவுள்ளதாக இயக்குனர் பாரதிராஜா அறிவித்துள்ளார். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பாரதிராஜாவும் இளையராஜாவும் 25 ஆண்டுகளுக்கு பிறகு இந்த படம் மூலம் இணைந்து பணிபுரிய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.