ஜெயலலிதாவின் பெயரில் கட்சி ஆரம்பிக்க டிடிவி தினகரனுக்கு எந்த அருகதை இல்லை என்று, செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் பொது கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அவர், ஆட்சியில் இல்லாமல் இறந்து போன திமுக தலைவர் கருணாநிதிக்கு அரசு மரியாதை அளிக்கப்பட்டதாக கூறினார்.
அவருக்கு உரிய மரியாதையை அதிமுக அரசு அளித்து இருப்பதாக அவர் தெரிவித்தார். ஆர்.கே.நகரில் மக்களை ஏமாற்றி வெற்றி பெற்ற தினகரனுக்கு ஜெயலலிதா பெயரில் கட்சி ஆரம்பிக்க என்ன தகுதி உள்ளது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கேள்வி எழுப்பினார்.