குட்கா வழக்கில் கைது செய்யப்பட்டு, விசாரணை முடிந்து தற்போது நீதிமன்ற காவலில் புழல் சிறையில் உள்ள குட்கா கிடங்கு உரிமையாளர்கள் மாதவ்ராவ், சீனிவாசராவ், பங்குதாரர் உமாசங்கர் குப்தா உள்ளிட்ட மூவரும் ஜாமீன் கோரி CBI முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில் வழக்கு CBI முதன்மை நீதிமன்ற நீதிபதி திருநீலபிரசாத் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
CBI தரப்பு வழக்கறிஞர் பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரியதால், வழக்கு விசாரணை மீண்டும் அக்டோபர் 6 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
குட்கா வழக்கில் கைது செய்யப்பட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செந்தில் முருகன், கலால் வரி துறை அதிகாரி நவநீதகிருஷ்ண பாண்டியன் ஆகியோரது ஜாமீன் மனுக்கள் முன்னரே தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது வரை குட்கா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குட்கா கிடங்கு உரிமையாளர்கள் மாதவ்ராவ், சீனிவாசராவ், பங்குதாரர் உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செந்தில் முருகன், கலால் வரி துறை அதிகாரி நவநீதகிருஷ்ண பாண்டியன், சுகாதார ஆய்வாளர் சிவகுமார் ஆகிய 6 பேரின் நீதிமன்ற காவல் நாளையுடன் நிறைவடைய உள்ளது.
Discussion about this post