செப்டம்பர் முதல் தேதியில் இருந்து இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. இதுகுறித்த விளம்பரங்களை மத்திய போக்குவரத்து அமைச்சகம் ஓரிரு நாட்களில் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. கார்களுக்கு பத்து சதவீத கட்டணமும், லாரிகள், பேருந்துகள் போன்ற கனரக வாகனங்களுக்கு 6 சதவீதமும் கட்டணம் உயர்த்தப்படக்கூடும் என தெரிகிறது. சாலை பராமரிப்பு, அடிப்படை வசதிகளை மேம்படுத்தவே கட்டண உயர்வை அமல்படுத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை புறநகரில் உள்ள 6 சுங்க சாவடிகள் உள்பட 20 சுங்கச் சாவடிகளில் அண்மையில் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் தேசிய நெடுஞ்சாலை கட்டுப்பாட்டில் உள்ள சுங்க சாவடிகளிலும் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post