சென்னையில் ஜெர்மன், ஆஸ்திரேலியா நாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மழை நீரை சேகரிக்கும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் வகையில் தமிழக அரசும், சென்னை பெருநகர மாநகராட்சியும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. வீடுகள், அடுக்குமாடி கட்டடங்களை தொடர்ந்து, மாநகராட்சி விளையாட்டு திடல் மற்றும் பூங்காக்களில் மழை நீரை சேமிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி ஜெர்மன், ஆஸ்திரேலியா நாடுகளில் பயன்படுத்தப்படும் எக்கோ ப்ளாக் என்ற தொழில்நுட்பம் மூலம், தனியார் நிறுவனத்துடன் இணைந்து இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
முதல்கட்டமாக தியாகராய நகரில் உள்ள மாநகராட்சி விளையாட்டு திடலில் எக்கோ பிளாக் முறை மூலம் மழைநீர் சேகரிக்கப்படவுள்ளது.
Discussion about this post