கிழக்கு தாம்பரம் பகுதியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் 50 சதவீத சலுகை விலையில் பொருட்களை விற்பனை செய்தனர் . இதை பார்த்து விட்டு வாடிக்கையாளர் ஒருவர் பொருட்கள் வாங்க சென்ற போது அங்கு சலுகை விலையில் வைத்திருந்த பொருட்கள் அனைத்தும் தயாரிப்பு தேதியிலிருந்து காலாவதியாகி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதனையடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார் கொடுத்ததன் பேரில் தாம்பரம், குன்றத்தூர், பல்லாவரம் ஆகிய பகுதிகளில் இருந்து வந்த அதிகாரிகள் அங்கு சோதனை நடத்தினர். சோதனையில் காலாவதியான பிஸ்கட், சாஸ், ஜீஸ் வகைகள், கூல் ட்ரிங்ஸ், பிரட், பண், சிப்ஸ் பாக்கெட்டுகள், உள்ளிட்ட 25,000 மதிப்புள்ள ஏராளமான உணவு பொருட்கள் பறிமுதல் செய்தனர்.
Discussion about this post