ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தின் போது, சுதந்திரத்திற்காக போராடியவர்களை கைது செய்து அடைப்பதற்காக கூடலூரில் 150 ஆண்டுகளுக்கு முன் சிறைச்சாலை கட்டப்பட்டது.
இதில் ஏராளமான அறைகளும், தூக்கு மேடையும் அமைக்கப்பட்டிருந்தன.
இந்த சிறைச்சாலை பராமரிப்பு இல்லாமல் இருந்தது. எனவே மலைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சிறைச்சாலையை புதுப்பிக்க நிதி ஒதுக்கப்பட்டது.
தற்போது இந்த சிறைச்சாலை புதுப்பிக்கப்பட்டு, சுற்றுலா பயணிகள் பார்வைக்கு திறக்கப்பட்டுள்ளது.
வரலாற்று முக்கியதுவம் வாய்ந்த இந்த சிறைச்சாலையை உருவாக்கிய மெக் ஐவர் குறித்த குறிப்புகள், ஆங்கிலேயர்கள் காலத்தில்
பணியாற்றிய காவலர்கள் மற்றும் கைதியின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
வராலாற்று முக்கியதுவம் வாய்ந்த புகைப்படங்கள், பொருட்கள், சிற்பங்கள் ஆகியவையும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
Discussion about this post